Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிட்வா சூறாவளியால் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
வெங்காயம், கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட வளர்க்கப்படும் பல வகையான காய்கறிகள் ஒரு கிலோவிற்கு ரூ. 400-500 சில்லறை விலையில் விற்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஒரு கிலோ கிராம் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 650 விலையில் விற்கப்படுகிறது.
கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் லீக்ஸ் போன்ற காய்கறிகள் ரூ. 300-350 விலையிலும், மிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ. 1300 விலையிலும், போஞ்சி ரூ. 1000 விலையிலும் விற்கப்படுகின்றன.
நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து வியாழக்கிழமை (18) அன்று 91,510 கிலோ கிராம் காய்கறிகளுக்கான தேவை கிடைத்ததாகவும், அந்த தேவையை பூர்த்தி செய்யும் காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு, அந்த காய்கறி இருப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நுவரெலியா பொருளாதார மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுவரெலியா காய்கறி விவசாயிகள் நுவரெலியா பொருளாதார மையத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி அறுவடை செய்வதால் மலையகத்தில் உற்பத்தி செய்யப்படம் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்காது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
7 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
48 minute ago
59 minute ago
1 hours ago