2025 ஜூலை 31, வியாழக்கிழமை

டெவோனை சுற்றியுள்ள பகுதிகள் பகலில் இருண்டன

Janu   / 2025 ஜூலை 21 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் இருந்து தலவாக்கலை சென்க்ளேர் வரை பொருத்தப்பட்டுள்ள 33,000 வாட் உயர் மின்னழுத்த மின் கம்பியின் மீது யூ கெலிப்ஸ்டிக் மரமொன்று விழுந்ததில் குறித்த மின் கம்பியில் பலத்த சேதம் ஏற்பட்டு , பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மையத்தின் மேற்பார்வையாளர் நிமல் சமரகோன் தெரிவித்தார்.

மத்திய மலைப்பகுதியில் இந்த நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக திங்கட்கிழமை (20) இரவு மரம் விழுந்துள்ளதாகவும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக விழுந்த மரத்தை வெட்டி அகற்றி மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தடைபட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதன் காரணமாக, பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உட்பட டெவோன் பகுதியில் உள்ள  நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக   நிமல் சமரகோன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .