2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொ.சே.சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள் ஹட்டனில்

Sudharshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் உரிமைகளை வலியுறுத்தி தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு, மார்ச் மாதம் 13ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளதாக இந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின்; மகளிர் பிரிவு தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் ஹட்டனில் இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பெருந்தோட்டத் தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளது. அதேபோல தொழிற்சங்கங்களிலும் பெண் அங்கத்தவர்கள் அதிகமாகவுள்ளனர். எனினும், இவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதி செய்யப்படவில்லை.

பெருந்தோட்ட பெண்களின் நலன் கருதி அமைச்சர் ப.திகாம்பரத்தின் முயற்சியினால் தனி வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வேளையில் பெண்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கிடைக்காத உரிமைகளை வலியுறுத்தியும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு இடம்பெறும்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .