2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தோட்டங்களை தனியார் கம்பனிகளிடம் கையளிக்கவும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா 

மொனராகலைப் பகுதியில்; ஜனவசமவின் கீழ் இயங்கும் எட்டு பெருந்தோட்டங்களை, தனியார் கம்பனியொன்றின் பொறுப்பில் விடுமாறு கோரி, தொழிலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'மொனராகலையில் குமாரவத்தை, மரகலை, பாராவிலை, கும்புக்கன, சின்னப்பாலாறு, பெரியபாலாறு, உலந்தாவ, வெளியாய ஆகிய எட்டு தோட்டங்களும் ஜனவசம பொறுப்பில் இயங்குகின்றன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்து வரும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜனவசமவின் பொறுப்பில் உள்ள மேற்படி தோட்டங்களில் தொழில்புரிந்து வரும் எமக்கு, சட்டபூர்வ கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால், நாம் பெரும் அவல வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். சம்பள திகதியன்று முறையாக சம்பளம்  வழங்கப்படுவதில்லை.

தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால், தோட்டங்கள் காடாகி, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் பெருகி வருகின்றன. தோட்டத் தொழிலாளர்களாகிய எமது  குடியிருப்புகள் சீரற்று காணப்படுகின்றன. அதனால், அக்குடியிருப்புக்களில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தோட்ட நிர்வாகங்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும், தோட்ட நிர்வாகங்கள் அதற்கு செவி சாய்ப்பதில்லை. எனவே, இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, குறிப்பிட்ட தோட்டங்களை, சிறப்பாக இயங்கும் தனியார்துறை கம்பனியொன்றுக்கு பொறுப்பாக வழங்குமாறு கோருகின்றோம்' என கூறப்பட்டுள்ளது.  இம்மகஜரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .