Kogilavani / 2016 ஜூன் 15 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
பொசன் போயா தினத்தில் தானசாலைகளை நடத்தவுள்ளோர், அதற்கான அனுமதியை பெற வேண்டுமென மாத்தளை நகரசபையின் ஆணையாளர் லலித் எடன்பாவெல கோரியுள்ளார்.
மாத்தளைக்கு உட்பட்ட பகுதிகளில் தானசாலகளை நடத்தவுள்ளோரே இவ் அனுமதியை பெற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சுத்தம் பேணப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்காக விசேட குழுவை அமைத்துள்ளதாகவும் இக்குழுவில், நகரசபையின் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.
இக்குழுவினர், பொசன் பௌர்ணமி தினமான எதிர்வரும் 19 ஆம் திகதி தானசாலைகள் அமைக்கப்பட்டள்ள இடங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் உணவு பண்டங்கள் உள்ளிட்டவற்றை சோதனையிடுவர் எனவும் அவர் கூறினார்.
36 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago