2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தேரிலிருந்து விழுந்து இளைஞன் காயம்

Kogilavani   / 2016 மார்ச் 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்  

தேரை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர், தவறி விழுந்து காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயகமை கிழக்கு தோட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக டயகமை பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவை முன்னிட்டு, மேற்படி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை(27) பகல், தேரை அலங்கரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது காலிடறி கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் டயகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .