2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தந்தையைக் கண்டு அதிர்ந்து போன மகன்

Freelancer   / 2022 மார்ச் 11 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

மடூல்சீமை - பிடாடமாறுவ பகுதியில் வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் 87 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த முதியவரின் மகன் தொழிலுக்கு சென்று வீடு திரும்பி வந்து பார்க்கும் வேளையில் தனது தகப்பனார் எரிகாயங்களுடன் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதை அவதானித்துள்ளார்.

பின்னர் இது குறித்து உடனடியாக மடூல்சீமை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மடூல்சீமை பொலிஸார் எரிகாயங்களுடன் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தற்போது பதுளை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இம்மரணம் கொலையா? தற்கொலையா? என மடூல்சீமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X