2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தனியார் வகுப்புகளுக்கு 14 நாட்கள் தடை

Kogilavani   / 2016 ஜூலை 05 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புகளை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (04)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடைபெற்று வருவதனால், மாணவ, மாணவிகள் சமயக் கல்வியை பெற்றுக் கொள்வதற்;கு பின்வாங்குகின்றனர்.

இதனால், நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கின்றன' என்றார். இளம் சமுதாயத்துக்கு சமயக் கல்வி இல்லாவிட்டால் அவர்கள் வழி தவறிவிடுவர் என்றும் அது முழு நாட்டையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .