2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தனிநபரால் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்  

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக தனிநபர் ஒருவரால், நுவரெலிய மாவட்டச் செயலக வளாகத்தில் இன்று (14) காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது  

நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பிரதீப் கமால் என்பரே இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இது தொடர்பில், பிரதீப் கமால் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

“நுவரெலியா மாவட்டச் செயலாளர் எலன் மீகஸ்முள்ள, தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதேபோல், ஊழல் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான நிலையில், அவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

பதவியை துஷ்பிரயோகம் செய்யதவருக்கு இவ்வாறான உயர் பதவியை வழங்கக் கூடாது என்பதை வெளிப்படுத்தவே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். எனவே, வேறு ஒருவருக்கு, கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .