2026 ஜனவரி 21, புதன்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவத்தினர்

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாத்தளை நாவுல பிரதேச செயலாளர் பிரிவில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று, பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அலுகொல்ல கிராமசேவகர் பிரிவில், இன்று (29) இரவு முதல் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி கிராமசேவகர் பிரிவில் 217 குடும்பங்களைச் சேர்ந்த 643 பேர் வசித்து வருகின்றனர் என்றும் இப்பகுதியில் இதுவரை 22 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X