Kogilavani / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எம்பிலிப்பிட்டிய - கொழும்பு வீதியில் பயணித்த தனியார் பஸ்ஸின் மீது, நேற்று (28) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோவொன்றில் வந்தக் குழுவினரே, பஸ்ஸை வழிமறித்துள்ளதுடன் பஸ்ஸின் சாரதி, நடத்துநர் ஆகியோரை தாக்கியுள்ளதுடன் பஸ்ஸூக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, புஸ்ஸெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டோ சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியக் குழுவினர் தனது ஓட்டோவை அமர்த்தியதாகவும் வந்தவர்கள் தொடர்பில் தனக்கு தெரியாது என்றும் குறித்த நபர் வாக்குமூலமளித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய வேறு எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago