Kogilavani / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில், தீ விபத்தினால் வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கு, தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(22) நடைபெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ், தலா 13 இலட்சம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.
வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத், ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒலிரூட் தோட்டத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தையும் ராமேஸ்வரன் எம்.பி திறந்து வைத்தார்.
மேற்படி சிறுவர் பராமரிப்பு நிலையம், ராமேஷ்வரன் எம்.பியின் வேண்டுகோளுக்கமைய தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய, மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அறை, வாசிப்பு அறை, ஓய்வறை, சாப்பாட்டு அறை, சமையல் அறை, சிறுவர் பராமரிப்பு உதவியாளர்களுக்கான அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, குழந்தை அறை, விளையாட்டு பொருட்களுக்கான அறை, குழந்தைகளுக்கான கழிவறை ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


18 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 Jan 2026
21 Jan 2026