Kogilavani / 2021 மே 03 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 10 வருடங்களுக்குப் பின்னர் தனி பெரும்பான்மையுடன் திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்றியுளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
காலம் சென்ற தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அமரர் முத்துவேல் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் நல்ல உறவை பேணி வந்துள்ளனர் என்றும் அந்தவகையில் இ.தொ.காவின் பொது செயலாளர் என்ற வகையில், இ.தொ.கா தலைவர்களின் வழியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தள்ளார்.
முதன் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான புரட்சித் தலைவி ஜெயலலிதா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றியீட்டிருப்பது கலைஞர் கருணாநிதியின் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் எனவே இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago