Editorial / 2023 ஜனவரி 28 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ் தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலவாக்கலை பொலிஸார் இன்று (28) மாலை மீட்டுள்ளனர். நீர்த்தேக்க பகுதியின் வீதி ஓரத்தில் பை ஒன்று அனாதரவாக விடப்பட்டிருந்ததை வழியில் சென்ற மக்கள் அவதானித்து தலவாக்கலை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு தேடிய போது நீர்த்தேக்கத்தி்ல் சடலம் ஓன்று மிதப்பதை அவதானித்து மீட்டுள்ளனர். அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர் பத்தனை மவுண்ட் வர்ணன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சதீஸ் (வயது 27) எனவும் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026