2026 மே 14, வியாழக்கிழமை

’திட்டமிட்டபடி கெலிவத்தை வீடமைப்பை நடைமுறைப்படுத்துக’

சுஜிதா   / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலிவத்தை தோட்டத்தில், திட்டமிடப்பட்டதன் பிரகாரம், வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில், ஒற்றுமையாக வாக்களித்தமைக்காக, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்புகளை, தொழிலாளர் தேசிய சங்கமும் முன்னணியும் பரவலாக நடத்தி வருகின்றது.

அந்த வகையில், கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி காலத்தில், மலையகத்தில் பல வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் தோட்ட நிர்வாகங்களிடம் இருந்து, காணியைப் பெற்றுக்கொள்வதே, வீடமைப்புத் திட்டத்துக்குத் தாமதமாக காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.

எனினும், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில், கெலிவத்தை தோட்டத்தில் வீடமைப்புக்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அந்த வகையில், வீடமைப்புத் திட்டத்துக்கான மக்களின் கோரிக்கைக்கு ​அமைய, திட்டமிட்டபடி, இந்த திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறைந்தபட்சம், அந்தக் காணிகளை பகிர்ந்தளித்தாலேயே, தங்களது வீடுகளைக் கட்டிக்கொள்ள, மக்களே தயாராக உள்ளனர் என்று கூறிய அவர், எவ்வாறாயினும், ஏற்கெனவே வீடமைப்புக்காக திட்டமிடப்பட்டுள்ளமையால், தற்போது இதற்குப் பொறுப்பாக உள்ள அமைச்சு, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .