Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கண்டி - கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட வெஸ்டோல் தோட்ட தமிழ் பாடசாலைக்கு இந்தியா அவனியூ முதலீட்டு முகாமைத்துவம் தொண்டு நிறுவனம் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் நிதி அனுசரணையில், திறன் வகுப்பறை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் கிராமப்புற மற்றும் தோட்டப்புற பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் வழங்கும் விசேட செயற்றிட்டத்தின் கீழ் இந்த திறன் வகுப்பு திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், அவரது பாரியார் ரேனுகா சிவஞான சுந்தரம், பணிப்பாளர் வைத்தியர் மாலதி வரன் நல்லையா கல்வி நிதியத்தின் பணிப்பாளர் பாலச்சந்திரன் நல்லையா, வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் என்.முரளிதரன், கண்டி மாவட்ட இணைப்பாளர் பெ.யோகேஸ்வரன், கம்பளை கல்வி வலய கோட்ட கல்வி பணிப்பாளர் உமேஸ்நாதன் மற்றும் வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago