R.Maheshwary / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை -மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்நிர்மாணம் செய்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கட்டுமாணப் பொருட்களை வழங்கியுள்ளார்.
தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகளில் தீ விபத்துக்கள் ஏற்படும் போது அவர்களுக்கு காப்புறுதி நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026