2025 மே 07, புதன்கிழமை

தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று

Kogilavani   / 2020 நவம்பர் 08 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

போகம்பறை தும்பர சிறைச்சாலையிலும் பழைய போகம்பறை சிறைச்சாலையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தும்பர சிறைச்சாலையில் ஆறு பேரும் போகம்பறை பழைய சிறைச்சாலையில் ஒருவருமே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக, போகம்பறை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி எழுவரையும் கொரோனா சிகிச்சை மய்யங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X