Editorial / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி பெருமாள்
சாமிமலை பகுதியில் உள்ள டீசைட் தோட்டத்தை சேர்ந்த மூவர், தேயிலை தொழிற்சாலையில், தேயிலை தூள் களவாடினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தோட்ட முகாமையாளர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இவர்கள் மூவரும் வியாழக்கிழமை (09) மாலை கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
டீசைட் தோட்ட தொழிற்சாலையில் விலை உயர்ந்த தேயிலை தூள் 25 கிலோ கிராம் டிசெம்பர் 20ஆம் திகதி களவு போனதை தோட்ட நிர்வாகம் அறிந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து குறிப்பிட்ட தேயிலை தூள் பொதி மீட்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில், மூவர் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2 minute ago
9 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
9 minute ago
2 hours ago
05 Nov 2025