2026 ஜனவரி 21, புதன்கிழமை

தேயிலை பயிர்ச்செய்கை குறித்து புதிய அறிவிப்பு

Editorial   / 2021 மே 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

இரத்தினபுரி மாவட்டத்தில் அடிக்கடி  மண்சரிவுகள் இடம்பெற்றுவருகின்றன. இந் நிலையில் மேட்டு நிலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில்  தேயிலை செய்கையாளர்களுக்கு  புதிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தேயிலை பயிர்ச்செய்கையின் போது 60 சத வீதத்துக்கு அதிகமான தாழ் வான நிலங்களில் தேயிலை பயிர் செய்கையை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டாமென இரத்தினபுரி மாவட்டத்தில் சிறு தேயிலை தோட்ட  உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரிவான இடங்களில் தேயிலை பயிர் செய்கையை மேற் கொள்ள அனுமதிக்க வழங்கவேண்டாமெனவும்  தேயிலைத் தோட்ட அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X