2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேர் பார்க்கச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ள சிறுவனின் பெற்றோர், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற ​அலைபேசிக்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X