Editorial / 2025 ஜூலை 23 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வும், D.P. Education நிறுவனத்தின் கணினி பிரிவைத் திறப்பு விழாவும் புதன்கிழமை (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி சிவப்பிரகாசம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் கேப்ரியல், D.P. Education நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர், W.D.G.அமில இந்திக்க, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, ரூ. 25 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்ட D.P. Education கணினிப் பிரிவை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது .
2025ம் ஆண்டுக்காக 125 புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள துடன் உள்வாங்கப்பட்ட மாணவர்களுக்கு மின்சார , வாகனங்கள் திருத்தல் தொடர்பான பயிற்சி, மேசன்,போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.









11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago