2026 ஜனவரி 21, புதன்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்

Kogilavani   / 2021 மே 03 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பெருந்தோட்ட தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில், தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு, பாடசாலைகளின் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையகப் பாடசாலைகளுக்கு, அண்மித்தக் காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டாலும் பல ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலைகளுக்கும் தமது சொந்த ஊர்களுக்குமென இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால், பாடசாலைகளில் மீண்டும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டும்கூட பல பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களின் பணியும் தொடர்கிறது. 

இவ்வாறு தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் மதிப்பளித்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு, பாடசாலைகளின் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X