2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’தொழிற்சங்க பேதமின்றி மக்கள் சேவை’

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்க அரசியல் பேதமின்றிய மக்கள் சேவை, மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்றதெனத் தெரிவித்த, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், இதனை மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய, 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பொகவந்தலாவை ஓல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் செப்பனிடப்பட்ட பாதையைத் திறந்து வைக்கும் வைபவம், நேற்று (06) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் "அமைச்சர் திகாம்பரம், தனது அமைச்சின் ஊடாக தோட்டப்பகுதிகளில் எவ்விதமான பாராபட்சமுமின்றி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். தோட்டப்பகுதிகளில் முன்னொருபோதுமில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

மேலும் "எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக, இந்தத் தோட்டத்தில் விளையாட்டு மைதானமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைக்குக் கட்டடமொன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டுக்கு மேலாக, இவ்வாண்டும் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தோட்டத்தில் விரைவில் வீடமைப்புத் திட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம்" எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X