Kogilavani / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பள நிர்ணய சபை அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, எவ்வகையிலும் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதித்துவிடக் கூடாது என்று, சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி, அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தச் சம்பள உயர்வுமூலமாக, கூட்டுஒப்பந்தம் வலுவிழக்கப்படுமாயின் அதனை நிவர்த்திச்செய்வதற்கு எம்மிடம் எவ்வாறான மாற்றுத் திட்டங்கள் உள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'சம்பள உயர்வு கிடைத்து ஏனைய உரிமைகள் மறுக்கப்படுவதையோ அல்லது ஏனைய சலுகைகள் கிடைத்து சம்பள உயர்வு மறுக்கப்படுவதையோ, நாம் முழுமையான வெற்றியாகக் கருத முடியாது' என்றார்.
'13 நாட்கள் வேலையை நடைமுறைப்படுத்த முற்பட்டால் அதனை எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றியும் இதன்மூலம் தொழிலாளர்களின் வேலை நாட்கள் இழக்கப்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது பற்றியும் சம்பள நிர்ணயச் சபையின் முடிவுபடி ஆயிரம் ரூபாய் வழங்கி, கூட்டுஒப்பந்தத்தை காலாவதியாக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றியும் முடிவெடுப்பதில் தாமதம் காட்டாமல் மலையகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் இணைந்து உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்' என்றார்.
'வெள்ளம் வரும்முன்னரே அணை கட்ட வேண்டும் என்பதுபோல ஏதாவது சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னரே நாம் மாற்றுத் திட்டங்களுடன் தயாராக இருப்பதே நன்மை தரும.; தொழிலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றிய புள்ளி விவரங்களுடன் வெளிவரும் தகவல்களையும் நாம் முழுமையாக உதாசீனப்படுத்தாமல் இவ்விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்கும் போக்கில் ஈடுபடாமல் இணைந்தச் செயற்பாட்டில் அனைவரும் ஆர்வம் செலுத்துவோம்' எனவும் தெரிவித்தார்..
4 minute ago
15 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
45 minute ago