Kogilavani / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல், கொட்டகலை சீஎல்எப் வளாகத்தில், இன்று (22) நடைபெற்றது.
இதன்போது பொகவந்தலாவை பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுப் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
மேலும் தொழிலாளர்கள் நாளொன்றுக்குப் பறிக்கும் தேயிலை அளவை தோட்ட முகாமையாளருடனும் குறித்த தோட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.
மேலதிகக் கொழுந்துப் பறித்தமைக்கான கொடுப்பனவுளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதாக, பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கம் இ.தொ.காவுக்கு எழுத்துமூலம் அறிவித்தது.
இந்தக் கலந்துரையாடலில், பொகந்தலாவை பெருந்தோட்ட யாக்கத்துக்கு உட்பட்ட தோட்டங்களின் காவலாளிகள், பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களின் உதவியாளர்களின் தற்காலிக பணி நிறுத்தம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் பரிசீலனை செய்து ஒருவாரத்தில் தீர்வு பெற்றுத் தருவதாக பொகவந்தலாவ பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், இ.தொ.காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி, காரியாலய உத்தியோகத்தர்கள், தோட்ட தலைவர், தலைவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago