Kogilavani / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யும் வகையில் எழுத்தாணை ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி 20 பெருந்தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமையானது, பெருந்தோட்ட மக்களுக்குக் கிடைத்த 50 சதவீத வெற்றியாகவே கருதுவதாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
மேற்படி ரிட் மனு, நேற்று (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, வடிவேல் சுரேஸ் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், “என் தொப்புள் கொடி உறவுகளான பெருந்தோட்ட மலையக மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியே ஆயிரம் ரூபாய் சம்பளம்” என்றார்.
வர்த்தமானி வெளியிடப்பட்ட அன்றைய நாளில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபாய் நாளாந்தச் சம்பளமும் 100 ரூபாய் வாழ்க்கைச் செலவும் சேர்த்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் இது தமக்குக் கிடைத்த 50 சதவீதமான வெற்றியாகவே, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கருதுவதாகவும் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago