2026 ஜனவரி 21, புதன்கிழமை

தொழில்நுட்பப் பிரிவில் மாணவன் சாதனை

Kogilavani   / 2021 மே 06 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 65 மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளதுடன் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் தோற்றிய மாணவர் ஒருவர், ஏபிசி பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

விஸ்வநாதன் பிரியன் என்ற மாணவரே, மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இக்கல்லூரியானது தேசிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருவதாகவும் ஆசிரியர்களின் உன்னதப் பணியே இதற்குக் காரணமாகும் என்றும் கல்லூரியின் அதிபர் முத்து ஜெயராமன் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X