2026 ஜனவரி 21, புதன்கிழமை

’தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் சுவீகரிக்கும்’

Kogilavani   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட வைத்தியசாலைகள் படிப்படியாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படுமென உறுதியளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அரச வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாட்டில் தற்போது 494 தோட்ட வைத்தியசாலைகள் காணப்படுகின்றன என்றும் இதில்  44 தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கண்டி, நுவரெலிய, பதுளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளே, இவ்வாறு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தோட்ட வைத்தியசாலைகளுக்கு முக்கியவத்துவமளித்து செய்யக்கூடிய அனைத்து சுகாதார வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என உறுதியளித்த சுகாதார அமைச்சர், நாட்டில் வைத்தியர்களுக்கானப் பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X