Kogilavani / 2016 ஜூலை 26 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'நாட்டின் கல்வித்துறையில், ஊவா மாகாணம் முன்னணியில் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தியதாகவே, எனது செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதனடிப்படையில், பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்காக, ஊவா மாகாண சபையின் ஊடாக இயன்ற உதவிகளை வழங்க தயாராகவுள்ளேன்' என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவும், கல்லூரியின் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்;, 'ஊவா மாகாணத்தில் 903 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 36 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக இருப்பதனால் அவற்றின் பொறுப்பை மத்திய அரசாங்கம் ஏற்றுள்ளது. மிகுதி 867 பாடசாலைகளும் எனது பொறுப்பிலேயே இருந்து வருகின்றன.
இப்பாடசாலைகளில் 28 பாடசாலைகள் மட்டுமே சிறந்த பாடசாலைகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, ஊவா ஹைலன்ஸ் தமிழ் மகா வித்தியாலயம், லுணுகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று தமிழ்ப் பாடசாலைகளும் உள்ளடங்கியுள்ளன.
ஊவா மாகாணத்தின் தமிழ், சிங்கள மொழி ஊடான அனைத்து பாடசாலைகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளேன். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வருவதுடன் பாடசாலைக்கு தேவைப்படும் ஏனைய வளங்களையும் பெற்றுக்கொடுத்தும் வருகின்றேன்' என்றார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago