2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிப்பு

Sudharshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் தற்போதைய அரசாங்கம் விலகிச்செல்ல வேண்டும் என வலியுறுத்தியும் 10 இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று, இன்று (31) நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டது.

'கிராமத்தின் அதிகாரத்தை கிராமத்துக்கு வழங்குங்கள். கிராமத்துக்கு கிராமம் கட்சி பேதமற்ற மக்கள் போராட்டம்' என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மாத்தளை நகரில் முன்னெடுக்கப்பட்ட இக்கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் ரோஹன திசாநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க, மாத்தளை மாநகர சபை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .