2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நூல்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, 50 நூலகங்களுக்கு, நூல்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் 25 எழுத்தாளர்களின் நூல்களைக் கொள்வனவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமும், நுவரெலியா மாவட்டச் செயலக மண்டபத்தில், புதன்கிழமை நடைபெற்றது.   

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணி, மூத்த எழுத்தாளர்களான தெளிவத்தைஜோசப், அல்அஸூமத் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.   

இதன்போது, 25 நூலாசிரியர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட 50 நூலகங்களுக்கு, 25 நூல்களைக் கொண்ட பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X