Editorial / 2026 மே 03 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரோட்லென் நீர்த்தேக்கத்தில் குதித்து நபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், பல்லேவத்த - பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய அனுர பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நீண்டகாலமாக மனநலப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இன்று காலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதையடுத்து, பொலிஸாரால் அவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலம் முதற்கட்டமாக வட்டவளை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
இச்சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
17 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago