Editorial / 2024 ஜனவரி 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலிய நல்லத்தண்ணி நகரில் 11,500 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வாடகை வான் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ்மூலையைச் சேர்ந்த 45 வயதுடைய வான் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போலி நாணயத்தாள்கள் சிக்கின. அதனை வைத்திருந்த சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீர்சேகர தெரிவித்தார்.
சந்தேகநபர் வலஸ்முல்ல பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்ரீகர்கள் குழுவுடன் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
37 minute ago