2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நஸ்லானை 7 நாட்களாக காணவில்லை

R.Maheshwary   / 2022 ஜூன் 15 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி


மாவத்தகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்வத்த வேஉடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய  முஹமட் நஸ்லான் என்ற இளைஞர், கடந்த 8ஆம் திகதி  கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து காணாமற் போயுள்ளார்.

கொழும்பில் பிட்டிங் தொழில் புரிவதற்காக சென்றிருந்த குறித்த இளைஞர், தனது நண்பருடன் கொழும்பிலிருந்து  ஊருக்குச் செல்வதற்காக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு வருகைத் தந்த போதே காணாமல் போயுள்ளார் என  அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

தனக்கும் காணாமல் போன நண்பருக்கும் ரயில் டிக்கட்டை பெற்றுக்கொண்டு வரும் போது, நண்பர் காணாமற் போயுள்ளதாக நண்பர்,  கோட்டை பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

இவர் பற்றிய தகல்வகள் கிடைக்கமாயின் அவருடைய தந்தை எம். டி. சாலிஹீன் 0758005637 அல்லது  அவருடைய உறவினர் ஏ.எம். முஜாஹிரின் 0772820820 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X