Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஞ்சல் தொலைத்தொடர்பு தொழிற் சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளன. திங்கள் (11) மற்றும் செவ்வாய் (12) ஆகிய இரு தினங்களும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறும் என்று தெரியவந்துள்ளது.
நுவரெலியாவிலும் கண்டியிலும் உள்ள 100 வருடங்களைத் தாண்டிய புராதன தபால் நிலையங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை விலக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் அஞ்சலகப் பணியாளர்களுக்கு 20,000 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சலக ஊழியர்களும் இணைந்து கொண்டதினால் தபால் சேவைகளும் தபாலகத்தினூடாக வழங்கப்படும் இன்னும் பிற சேவைகளும் முடங்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago