R.Maheshwary / 2022 மார்ச் 07 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
தொழில் அமைச்சு மற்றும் நாட்டில் உள்ள சட்டங்கள் மக்களை பாதுகாக்குமென எண்ணியிருந்த போதிலும் இலங்கை நாட்டில் உள்ள சட்டங்கள் மக்களை ஒருபோதும் பாதுகாப்பது நிச்சயமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
தெரிவித்தார்.
பொகவந்தலாவ- கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு மைதானத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும்
இரண்டு மாத காலத்தில் சிறந்த தீர்வு எட்டப்படும் என தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பிரித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என எதிர்தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் ஒரு போதும் காணிகளை பிரித்து வழங்கப்போவதில்லை .
தேயிலை பறிக்கும் தொழிலுக்கு தோட்ட நிறுவனங்கள் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. இதனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைவடைந்து விடும். ஆகையால் தான் தொழிற்சாலகளை உருவாக்கி ஒரு மாற்றுவழியினை முன்னெடுக்கவேண்டும் என தான் கூறுவதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026