R.Maheshwary / 2021 ஜூன் 11 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய்க் குட்டியொன்று காணாமல் போனதால், நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம், பலாங்கொட- வெலிக்கபொல தலகஸ்கந்தை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், தனியார் விநியோகத் திட்டம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றிய 77 வயதுடைய நபர் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நாய்க் குட்டி காணாமல் போனதையடுத்து, நாய்க்குட்டியின் உரிமையாளர், அவரது வீட்டுக்கு அருகில் வசித்த உயிரிழந்த நபரிடம் விசாரிக்கச் சென்ற போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது தாக்குதலுக்கு ,லக்கான பாதுகாப்பு விநியோக அதிகாரி மயக்கமடைந்து கீழே விழுந்ததால், சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட தயாரானபோது உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago