Niroshini / 2021 மே 02 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
நுவரெலியா - வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நில்தண்டாஹின்ன பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வலப்பனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நில்தண்டாஹின்ன கிராம சேவக பிரிவிற்குட்பட்ட 4 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இந்நிலையிலேயே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நில்தண்டாஹின்ன முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
13 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago