Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 24 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்தெனிய, திகணயிலுள்ள நீச்சல்தடாகத்தில், தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த 33 வயது நபரொருவர், நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஹேவாஹெட்ட, ரஹதுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர், தனது நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக வந்தபோதே, இவ்விபரீதச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக, மெனிக்ஹின்ன வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .