2026 மே 14, வியாழக்கிழமை

dd

நுவரெலியா பொது மலசலக்கூடத்தை பாவிக்கவே முடியாது

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பொது மலசலக்கூடத்தைப் பாவிக்க முடியாத நிலை காணப்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கட்டணம் அறவிட்டும், மலசலக் கூடத்தை உரிய முறையில் பராமறிக்காமையால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும், நுவரெலியா பஸ் நிலையத்தை அண்டியே இந்த மலசலகூடம் காணப்படுகின்றமையால், நுவரெலியா நகருக்கு வரும் அனைவருமே இந்த மலசலக்கூடத்தையே பயன்படுத்துகின்றனர்.

சில சுற்றுலாப்பயணிகளும் இந்த மலசலக்கூடத்தைப் பயன்படுத்துகின்ற நிலையில், இந்த மலசலக்கூடம் சுத்தமாக வைக்கப்படவேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்த மலசலக்கூடத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் காரணமாக, குறித்த பகுதியிலுள்ள வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாகவும் எனவே, உரிய தரப்பினர் இந்த மலசலக்கூடத்தைப் புனரமைத்து, சுத்தமாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .