Niroshini / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு, கொரோனா தொற்று தொடர்பில் இன்னும் கூடிய விழிப்புணர்வு வழங்குவது அவசியமென வழியுறுத்திய தொழிலாளர் தேசிய சங்க நிர்வாக இயக்குனரும் ஹட்டன் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான அழகமுத்து நந்தகுமார், இக்காலப்பகுதியை அலட்சியப்படுத்திவிட வேண்டாமெனவும் அறிவுறுத்தினார்.
இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வது அவசியமென்றும் பெருந்தோட்டப் பகுதிகளில், சுகாதார குறைப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், தனிமனித சுகாதார நடவடிக்கைகளைத் தோட்ட மக்கள் பின்பற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, சுகாதார பிரிவினர் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகின்றனரெனத் தெரிவித்த அவர், இந்த நிலையில், தோட்டப் பகுதிகளில் மக்கள் கோவில் விசேடங்களில் கலந்துகொள்வதை பொது சுகாதார பிரிவினர் தடத்து வருவதுடன், பொதுமக்கள் ஒன்று கூடல்களையும் தவிர்த்து வருகின்றனரென்றார்.
மேலும், ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோர்வூட் உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடும்பவாரியான கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago