2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் ஒருவருக்கு மரணதண்டனை

டி.சந்ரு   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளங்டன் தோட்டம், நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், நபரொருவருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணதண்டனைத் தீர்ப்பு விதித்துள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (01) விசாரணைக்கு வந்தபோது, நீதவான் எஸ்.பி.யு. கரலியத்த, இந்த மரணதண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரொருவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் வைத்து வழங்கிய இறுதி வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .