R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துகள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அப்பகுதி முழுவதும் இருண்ட கால நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நுவரெலியா நகர எல்லை , ஹவா எலியா ,பொரலந்தை, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிளிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால்,மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.
நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், தமக்கு முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலை உள்ளதால் வாகன சாரதிகள் ஒவ்வொரு வாகனத்தில் மின்விளக்குகளையும் ஏற்றுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செ.தி.பெருமாள்
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago