2026 ஜனவரி 21, புதன்கிழமை

நூரளை மாவட்டத்தில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

Kogilavani   / 2021 மே 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பிசிஆர் இயந்திரமே காணப்படுவதால் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இம்மாவட்டத்துக்கு மேலும் ஒரு பிசிஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்றும் எனினும் அவர்களை அடையாளங் காண்பதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“நுவரெலியாவில் நேற்று முன்தினம் 104 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகளே நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்றன. அதற்கு ஒரேஒரு பிசிஆர் இயந்திரம் இருப்பதே காரணம். பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுமாயின் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்” என்றும் அவர் தெரிவித்தார்.

தொற்றாளர்கள் திறந்த வெளியிலும் பொதுஇடங்களில் சுயாதீனமாக செயற்படுகின்றார்கள் என்றும் அவர்களை இனம்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால், பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவுகள் மிக விரைவாக வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் முறையான பிசிஆர் பரிசோதனையோ அல்லது தடுப்பூசியோ இன்னும் வழங்கப்படவில்லை என்றும் இது தொடர்பிலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றம் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X