Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
மத்திய, ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள வாசிகசாலைகளுக்கு, ஒரு தொகுதி புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை, இந்தியா கோயம்புத்தூர் மேற்கு ரொட்டறி கழகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதமொன்றை, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேரடியாக கையளித்துள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராமின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா, கோயம்புத்தூர் ரொட்டறி கழக உறுப்பினர்கள், நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனுக்கும் கோயம்புத்தூர் ரொட்டறி கழகத்தின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், நுவரெலியா, கிரேன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கலந்ததுரையாடலில் மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் கோயம்புத்தூர் மேற்கு ரொட்டறி கழகத்தின் உறுப்பினர்களான டி.ஏ.பிரபுசங்கர், செயற்றிட்ட தலைவர்,பி.ஜெயகாந்தன், எம்.பாஸ்கர் , வி.எஸ்.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போதே, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள வாசிகசாலைகளுக்கு ஒரு தொகுதி புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கு, கடிதம் மூலம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. கோயம்புத்தூர் ரொட்டறி கழகத்தினர் இதற்கான ஏற்பாடு செய்யவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025