Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று காணாமல் போயுள்ளது.
லிந்துலை பகுதியிலிருந்து தலவாக்கலை நகருக்கு முச்சக்கரவண்டியில் வந்த மூவர், முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தில் முச்சக்கரவண்டி நொடிப்பொழுதில் காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து தலவாக்கலை நகரில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு முச்சக்கரவண்டி உரிமையாளர் முறைப்பாடளித்துள்ளார்.
இதையடுத்து விரைந்து செயற்பட்ட போக்குவரத்து பொலிஸார் சில மணிநேரத்திலேயே முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தனர்.
முச்சக்கர வண்டியை அவ்விடத்திலிருந்து வேறொரு நபர் லிந்துலை நோனாவத்தை பகுதிக்கு ஓட்டிச்சென்றதை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது,
“தானும் முச்சக்கரவண்டியில் வந்ததாகவும் அதனை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்று திரும்பி வந்து தனது முச்சக்கரவண்டி என தவறுதலாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை எடுத்து சென்றதாகவும், இரண்டு முச்சக்கரவண்டிகளும் சிவப்பு நிறத்திலேயே இருந்தமையினால் சரியாக கவனிக்கவில்லை எனவும்” முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற நபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காணாமல்போன முச்சக்கரவண்டியை அதன் உரிமையாளரிம் ஒப்படைத்த தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago