2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நோயாளர்களுக்கு தபால்மூலம் மருந்துகள்

Gavitha   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையால், பலாங்கொடை அரசாங்க வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவோருக்கான மருந்துகளை, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி இஷாரா பதிரணகே தெரிவித்தார்.

பலாங்கொடை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு கமிட்டிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பலாங்கொடை பிரதேசத்தில், கடந்த ஆண்டு 3 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டிருந்தனர் என்றும் எனினும் இந்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இவர்களில் 50 பேர், இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவிலும் 28 பேர், பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவிலும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு மருந்துப் பொருள்களை விநியோகிப்பதில், பல நாள்கள் தாமதம் ஏற்படுவதாக, நோயாளர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிக அவதானம் செலுத்தி, உரிய தினங்களில் நோயாளர்களுக்கான மருந்துப் பொருள்களை தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைப்புக்குழு தலைவருமான அகில சாலிய எல்லாவள வைத்தியசாலை நிர்வாகத்தினரை அறிவுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில், மருந்துப் பொருள்கள் நோயாளர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .