Sudharshini / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டிய, ஹெலஉடகந்த மஹா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலிருந்து 7 பாம்புக் குட்டிகளும் 70 பாம்பு முட்டைகளும் இன்று (29) மீட்கப்பட்டுள்ளன.
பாடசாலையின் மாணவர்கள் மதிய நேர இடைவேளையின் போது விளையாடுவதற்காக மேற்படி மைதானத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது, பாம்புக் குட்டிகள் இரண்டு மைதானத்தில் ஊர்ந்து திரிவதை கண்ட மாணவர்கள், அது தொடர்பில் பாடசாலை ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளனர்.
பாடசாலை ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து மைதானத்தில் மேற்கொண்ட சோதனையின்போது 6 பாம்புக் குட்டிகளும் 70 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பாம்புக் குட்டிகளும் முட்டைகளும் வன விலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago