2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பெண்ணை கொலை செய்ய முயன்ற நபர் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மாவில்மட பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான எம்.டீ.நிலூஷா குமாரசிறி (வயது 33) என்பவரை, வாகனத்தில்; மோதி கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர்களில் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கண்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும்  நிலூஷா, வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை (16) தனது கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த போது, மாவில்மட பிரதேசத்தில் வைத்து காரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி, வாகனத்துடன்  தலாத்துஒயா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவரை கைதுசெய்து  கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தலாத்துஒயா பொலிஸார் ஒப்படைத்தனர்.

இந்நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து,  இவ்விபத்து திட்டமிட்ட ஒரு கொலை முயற்சி என தெரியவந்துள்ளது. மேற்படி பெண்ணை கொலை செய்வதற்காக கார் ஒன்றை குத்தகைக்கு எடுத்து வந்துள்ளனர். இதை, வாகன விபத்து என அனைவரையும் நம்பவைத்து  இக்கொலையை செய்வதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளர் என தெரியவந்துள்ளது.

இத்திட்டத்துடன், தொடர்புடைய மேலும்; சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலூஷாவின் கணவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .